ப.சிதம்பரத்தின் வீடுகளில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் (சி.பி.ஐ) திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

9பேர் கொண்ட குழுவினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இவர்களின் வீடுகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

வீடுகள் மட்டுமின்றி, சென்னை, காரைக்குடி, டெல்லி மற்றும் நொய்டா உள்ளிட்ட 14 இடங்களிலும், சிதம்பரத்தின் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடிவடிக்கை மேற்ககொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு இருந்த தொடர்பின் அடிப்படையிலே குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்