இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்: அதிகளவான மக்கள் வெளியேற்றம்

இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் இராணுவம் முன்னெடுத்து வரும் தொடர் தாக்குதலையடுத்து, அப்பகுதியிலிருந்து அதிகளவான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இராணுவ ஒப்பந்தத்தை மீறி ஜம்மு – காஷ்மீர் ரஜுரி மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் இராணுவம் மூன்றாவது நாளான நேற்றும் (திங்கட்கிழமை) தாக்குதல் மேற்கொண்டது.

பாகிஸ்தானின் தொடர் தாக்குதலையடுத்து, எல்லையில் உள்ள 1500-இற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு நிலையில், அவர்கள் பாதுகாப்பாக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதலால் நவ்ஷோரா, மஞ்சகோட் பகுதிகளிலுள்ள 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

அத்தோடு குறித்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியிலுள்ள 50இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்