விளக்கேற்றுவதற்கான விதிகள் தெரியுமா?

மங்கலகரமான காரியத்தினை நாம் விளக்கேற்றிவிட்டு துவங்குவது தான் வழக்கம். விளக்கேற்றுவது ஒரு மங்கலகரமான செயலாகவே பார்க்கப்படுகிறது.

விளக்கினை ஏற்றுவதற்கும் சில விதிமுறைகள் உள்ளது. அந்த விதிகளை சரியாக பின்பற்றுவது நன்மையினை தரும்.

விளக்கேற்றுவதற்கான விதிகள்

வீட்டில் நாம் பூஜையினை தொடங்கும் முன்னர் சுமங்கலி ஒருவரை விளக்கேற்ற சொல்லி வணங்கிய பின்னரே தொடங்க வேண்டும்.

தீபத்தினை ஏற்றும் முன்னர் விளக்கில் எண்ணெய் ஊற்றிய பின்னரே திரியினை இட வேண்டும்.

எண்ணெய் விட்ட பின்னர் எத்தனை திரியினை வைத்தாலும் அத்தனையினையும் ஏற்ற வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு திரிகளாவது இட்டு விளக்கேற்றவேண்டும்.

இரண்டு திரிகளின் நுனிகளையும் இணைத்து அதை இணைத்து தீபமேற்றுவது உன்னதமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.

கிழக்கு திசையினை நோக்கி விளக்கேற்றினால் பலன்கள் அனைத்தும் முழுமையாக கிடைக்கும்.

 

திரிகளின் பயன்கள்

பெரும்பாலானவர்கள் பஞ்சு திரியினையே பயன்படுத்துவார்கள். ஒவ்வொரு திரிக்கும் ஒவ்வொரு பலன் உண்டு.

  • பஞ்சு திரி கொண்டு விளக்கேற்றினால் பித்ருக்களின் சாபம், வம்சாவளி பிரச்சனைகள் நீங்கும்.
  • மஞ்சள் திரியினால் விளக்கேற்றினால் அனைத்து வியாதிகளும் நீங்கும். செய்வினை போன்ற பிரச்சனைகள் தீரும்.
  • சிவப்பு நிறத்திலான துணியினை பயன்படுத்தி விளக்கேற்றினால் திருமண தடை நீங்கும், குழந்தை பேறு கிட்டும்.
  • வெள்ளை திரியினை பன்னீரில் நனைத்து திரியாக இட்டால் மனக்குழப்பங்கள் நீங்கி, தெளிவான சிந்தனை பிறக்கும்.
  • வெள்ளெருக்கம் பட்டையால் செய்யப்பட்ட திரியினை பயன்படுத்தி விளக்கேற்றினால் பொருளாதார பிரச்சனைகள் நீங்கி செல்வம் பெருகும்.
  • தாமரைப்பூ தண்டினால் ஆன திரியினை கொண்டு விளக்கேற்றினால் முன்கர்ம பாவங்கள் நீங்கி, வாழ்க்கை மேம்படும்.
  • வாழை நார் திரியினால் விளக்கேற்ற குடும்ப பிரச்சனைகள், நில சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்