சுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள் -2017.. (அறிவித்தல்)

தமிழீழ மக்கள் கல்விக்கழகம் நடாத்தும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள்(2017), சூறிச் மாநிலத்தில்…

அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!
தமிழீழ மக்கள் கல்விக் கழகம் (PEOT) 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை எட்டு மணிக்கு (08.00) சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி ஒன்றை நிகழ்த்தி, அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவு செய்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிரை அர்ப்பணித்த அனைவரையும் நினைவு கூருமுகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினரால் அன்றையதினம் பிற்பகல் இரண்டு மணிக்கு (14.00), அதே மண்டபத்தில் நிகழ்த்தப்படவிருக்கும் 28வது வீரமக்கள் தினத்தில் சிறப்புப் பரிசில்கள் வழங்குவதுடன் பங்குபற்றும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.

சுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து பங்குபற்ற வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

** விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. **
*** உங்கள் கவனத்திற்கு:-

** போட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தின் ஒழுங்கு விதிமுறைகளுடன் நடைபெறும்.

** விண்ணப்பங்கள் எதிர்வரும் 15.06.2017க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

** போட்டிகள் 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணிக்கு (08.00a.m) GZ Affoltern, Bodenacker 25, 8046 Zürich-Affoltern என்ற இடத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெறும்.

** உங்கள் விண்ணப்பப்படிவம் அனுப்பி வைக்கப்பட வேண்டிய முகவரி..
PEOT , Postfach – 357, 3414 Oberburg.
அல்லது/or: ploteswiss@gmail.com

** பேச்சுப் போட்டிகள் உட்பட அனைத்து அறிவுப்போட்டிகளிலும் அரசியல் முற்றாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.

** உங்கள் விண்ணப்பப் படிவத்திற்குரிய கட்டணம் 25 (இருபத்தைந்து) சுவிஸ்பிராங், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அல்லது அதற்கு மேலாயின் ஒருவருக்கு 20(இருபது) சுவிஸ்பிராங்கின் படி செலுத்தவும்.

** 2012 ம் ஆண்டும் அதன் பின் பிறந்தோர் பிரிவுகளுக்கான கட்டணம் 15 (பதினைந்து)) சுவிஸ் பிராங்குகள்.

** விண்ணப்பப் படிவத்துடன் பரீட்சையின், போட்டியாளரின் வதிவிடவுரிமைப் பிரதியையும் தவறாமல் இணைக்கவும்.

** பரீட்சைகள் சுவிஸ் பாடசாலை நடைமுறை (ஆண்டு) வயதிற்கேற்ப நிகழ்த்தப்படும். (தமிழ் பாடங்கள் தவிர்த்து)

** தொடர்புகட்கு:- 077 948 52 14, 078 916 71 11, 077 959 10 10, 079 733 35 39, 076 583 84 10

-தமிழீழ மக்கள் கல்விக் கழகம் சுவிஸ்கிளை-

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்