வெசக்கை முன்னிட்டு திருமலை மாவட்ட செயலகத்தில் இரத்ததான நிகழ்வு!

(அப்துல்சலாம் யாசீம்-)
சர்வதேச வெசக் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று இரத்ததான நிகழ்வு வழங்கும் வைபவம்  இன்று (16) நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரச அதிகாரிகள் முப்படை மற்றும் பொலிசார்  பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இரத்ததானங்களை அன்பளிப்புச் செய்தனர்.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வானது வருடந்தோறும் மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தினால் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்