விபத்தில் பெண் மரணம்.இளைஞனுக்கு மறியல்!

 

(அப்துல்சலாம் யாசீம்-)

திருகோணமலை-புல்மோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள்  வீதியால் பயணித்துக்கொண்டிருந்த வயோதிபப்பெண்ணுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (16)   உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் குச்சவௌி.ஜாயா நகரைச்சேர்ந்த டி.காஸரா உம்மா (70வயது) எனவும் தெரியவருகின்றது.
வயோதிபப்பெண்ணின் வீட்டுக்கு முன்னாலுள்ள ஹோட்டலுக்கு சாப்பாடு வாங்கச்சென்ற போது அதே இடத்தைச்சேர்ந்த இளைஞன் மோதியதாகவும் தெரியவருகின்றது.
குறித்த இளைஞனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை விளக்கமறியலில் வைக்குமாறும் திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விபத்து தொடர்பாக குச்சவௌி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை  சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணையினையடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் குச்சவௌி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை இன்று செவ்வாய்கிழமை காலை திருகோணமலை பிரதான வீதியில் முற்சக்கர வண்டியும்.மோட்டார் சைக்கிளும் மோதியதில் இரு வாகன சாரதிகளும் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை.சுமேதகம பகுதியைச்சேர்ந்த எஸ்.கே.அனுதரன் (21வயது) மற்றும் புதிய சோனகத்தெருவைச்சேர்ந்த சீ.எம்.வஹார்தீன் (58வயது) ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்