அதிபரை இடமாற்ற கோரி எதிர்ப்பு நடவடிக்கை.

(க.கிஷாந்தன்)

பாடசாலை மாணவர் ஒருவரை பாடசாலை மலசலகூடத்திற்கு நீரை ஊற்றும்படி அதிபர் பணித்ததால் அப்பாடசாலை வளாகத்தில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் நீரை எடுக்க சென்ற மாணவன் கிணற்றில் தவறிவிழுந்துள்ளான்.

அம்மாணவனை சில நிமிடங்களுக்கு பின் அப்பகுதியில் இருந்த சிலர் கண்டு உடனடியாக கிணற்றிலிருந்து மீட்டுள்ளனர். இந்த சம்பவம் 15.05.2017 அன்று நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 3 அக்கரப்பத்தனை அப்பகிரன்லி தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பாடசாலையில் தரம் 4ல் கல்வி கற்கும் மாணவேன இவ்வாறு கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

அதிபரின் இந்த பணிப்பின் ஊடாக மாணவனின் உயிர் பறிபோகும் நிலையை கண்டித்தும், இப்பாடசாலையில் இடம்பெறுகின்ற ஒழுங்கீனங்களை சுட்டிக்காட்டியும், அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும் என வழியுறுத்தியும் அக்கரப்பத்தனை அப்பகிரன்லி தோட்ட தொழிலாளர்கள் பாடசாலை வளாகத்தினுள் 16.05.2017 அன்று காலை எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னடுத்தனர்.

இதன்போது அவ்விடத்திற்கு வருகை தந்த நுவரெலியா கல்வி திணைக்களத்தின் கோட்டம் 3 பணிப்பாளர் எம்.ஜெயராம் அவர்களிடம் பொது மக்கள் குறையினை தெரிவித்த போது, அவர் அதிபர் தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உத்தரவு அளித்ததை தொடர்ந்து எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டது.

இந்த எதிர்ப்பு நடவடி்ககையில் சுமார் 100ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அக்கரப்பத்தனை பொலிஸாரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்