இணையத் தாக்குதல்: ஸ்கொட்லாந்தில் அவசர கூட்டம்

உலக நாடுகள் பல இணையத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், எதிர்காலத்திலும் இதுபோன்ற தாக்குதல்களில் சிக்காதிருப்பதற்காக மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஸ்கொட்லாந்தில் அவசர கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் இணையக் கட்டமைப்பு குறித்த தாக்குதலுக்கு உள்ளானமையால் பெரும் இழப்புக்கள் ஏற்பட்டதை தொடர்ந்தே குறித்த கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் 11 சுகாதார சேவை அமைப்புக்கள், தேசிய சுகாதார சேவை அமைப்புக்கள் மற்றும் ஸ்கொட்லாந்து ஆம்புலன்ஸ் சேவை ஆகியன கலந்துகொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் இது போன்ற பல இணையக் கட்டமைப்புக்கள் இணையத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை இதுவே முதன் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த இணையத் தாக்குதலுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் தொடர்பு உண்டா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்