தர்மபுரத்தில்  பிரச்சினைகளை அறிந்து தீர்ப்பதற்கான கலந்துரையாடல்

 எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி தர்மபுரம் பொலீஸ் பிரிவில் பிரச்சினைகளை  அறிந்து தீர்த்துக்கொள்வதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று 16-05-2017 இடம்பெற்றுள்ளது.
இன்று பிற்பகல் நான்கு மணியளவில் தர்மபுரம் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி  சத்துரங்க தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி உதவி பொலீஸ் அத்தியட்சர் றொசான் ராஜபக்ச கலந்துகொண்டார். பொலீஸ் மா அதிபரின் பணிப்பிற்கமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளகப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் சட்டவிரோத, சமூக விரோத நடவடிக்கைகள் மற்றும் குறிப்பாக பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டன.
சட்டவிரோத செயற்பாடுகளான கசிப்பு, மரம் மணல் கடத்தல் போன்ற செயற்பாடுகளை மிக விரைவில் ஓழிக்க வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு அமைவாக பல்வேறு நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு தாங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலீஸார் தெரிவித்ததுடன்  அதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பையும் கேட்டுக்கொண்டனர்.
அத்தோடு இந்த நடவடிக்கையில் முதற்கட்டமாக கல்லாறு பகுதியில் பொலீஸ்  காவலரன் ஒன்றை அமைப்பதற்கும்  தீர்மானிக்கப்படடுள்ளது இக் கலந்துரையாடலில் தர்மபுரம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்