இரு குழுக்களுக்கிடையே மோதல் 09 பேர் வைத்தியசாலையில்

 

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் திருமண விபந்துபசார வீட்டில் இடம் பெற்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறியதினால் 09 பேர் சிகிச்சைக்காக
மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இன்று (16) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
கடந்த 14ம் திகதி திருமண நிகழ்வு இடம் பெற்றதாகவும் இன்றைய தினம் மதிய உணவு விருந்துபசார நிகழ்வு இடம் பெற்றிருந்த வேளை பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட வாக்கு வாதம் கைகலப்பாக மாறியதாகவும் அதில் 24 வயது யுவதியை தாக்கியதாகவும் அதனாலேயே கைகலப்பு பாரியளவில் மாற்றமடைந்ததாகவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இதில் மூன்று பெண்களும் அடங்குவதாகவும் தெரியவருகின்றது.
குறித்த 09 பேரில் 06 பேர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் கைகலப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்