மும்பை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது புனே அணி!

ஐ.பி.எல். தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரைசிங் புனே சுப்பர்ஜெயன்ட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய புனே அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்களை பெற்றது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக திவாரி 58 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மும்பை அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது. இதனால் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக பார்தீவ் பட்டேல் 52 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வொஷிங்டன் சுந்தர், போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த ஆண்டுடன் விடைபெறும் புனே அணிக்கு இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தமை பெறும் அதிஷ்டமாக கருதப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்