சிலர் உடைப்பார்!!

சிலர் உடைப்பார் சிலர் தடுப்பார் – சிலர்
உடைத்துக் கொண்டே நடிக்கின்றார்.
சிலர் தடுப்பார் சிலர் நடிப்பார் – சிலர்
தடுப்பது போலே நடிக்கின்றார்

காலம் என்று மாறும் – நம்
கவலைகள் என்று தீரும்
இருந்ததை விரட்டி இதைப் பெற்றோம்
இருப்பது மிரட்ட எது செய்வோம்
சிலர் உடைப்பார் சிலர் நடிப்பார் – சிலர்
உடைத்துக் கொண்டே நடிக்கின்றார்

‘ஞானம்’ கொண்ட உள்ளம் -அது
நாற்றக் கழிவுள்ள பள்ளம்
வீ’ணாய்’ இறையை இழுக்கின்றான்
தா’னாய்’ அழிய அலைகின்றான்.
சிலர் உடைப்பார் சிலர் நடிப்பார் – சிலர்
உடைத்துக் கொண்டே நடிக்கின்றார்

காவி போகும் முன்னே- அதை
ஏவி விடுவார் பின்னே
சாவி கொடுக்கிறார் சதிகாரர்
சாதாரண பேரினம் நல்லவர்கள்.
சிலர் உடைப்பார் சிலர் நடிப்பார் – சிலர்
உடைத்துக் கொண்டே நடிக்கின்றார்.
Mohamed Nizous

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்