வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்ற மர்ம நபரால் பரபரப்பு: பாதுகாப்பு தீவிரம்

வெள்ளை மாளிகையின் வடக்கு பகுதியிலுள்ள தடுப்பு சுவரினூடாக மர்ம நபரொருவர் உள்நுழைய முயற்சித்ததை அடுத்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வாசஸ்தலமும், அலுவலகமும் அமைந்துள்ள பகுதியினூடாகவே குறித்த மர்ம நபர் நேற்று (செவ்வாய்க்கிழமை) உள்நுழைய முயற்சித்துள்ளார்.

இந்நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துருக்கி ஜனாதிபதி வொஷிங்டனுக்கு விஜயம் செய்திருந்த நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளை மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் ஏற்கனவே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்