போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

இரண்டு நாட்களாக நடைபெற்ற வந்த போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் மீள பெறப்பட்டதையடுத்து, இன்று (புதன்கிழமை) காலை முதல் தமிழகம் முழுவதும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்க ஆரம்பித்துள்ளன.

தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர்களான செங்கோட்டையன் மற்றும் தங்கமணி உள்ளிட்டோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து போராட்டத்தை மீளப் பெறுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து ஊழியர்கள் இன்று காலை முதல் வழமைபோல தங்கள் பணிகளுக்கு திரும்பியுள்ளனர்.

சம்பள உயர்வு, ஓய்வூதியம், நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான அரச பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்