எதிர்கால சந்ததியினரின் வாழ்வை பிரெக்சிற் சீரழிக்கும்: லிபரல் ஜனநாயகக் கட்சி

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறும் நடவடிக்கையானது, எதிர்கால சந்ததியினரின் வாழ்வை சீரழிப்பதாக அமையும் என பிரித்தானிய லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டிம் ஃபரோன் (Tim Farron) தெரிவித்துள்ளார்.

லிபரல் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான விதிமுறைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற பட்சத்தில் பொதுமக்களுக்கு அதற்கெதிராக செயற்பட உரிமை உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளூர் சந்தையில் பிரித்தானியா நிலைத்திருப்பது பிரித்தானிய வணிகத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இன்றியமையாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லிபரல் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனமானது, இளைஞர்களின் சுபீட்சமான எதிர்காலத்தை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்