இந்தியாவிற்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதி பொலிஸ் காவலில்

இந்தியாவிற்குள் ஊடுருவிய ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதியை 12 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை நடத்துமாறு மகராஜ்கஞ்ச் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேபாளத்தில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் சோனாலி பகுதிக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி நசீர் அகமதுவை எஸ்.எஸ்.பி. சிறப்பு ஆயுதப்படையினர் கடந்த 13ஆம் திகதி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நசீர் அகமது தீவிரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தீவிரவாதி நசீரை லக்னோவிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாக தீவிரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முனைப்போடு, பாகிஸ்தானில் உள்ள ஹிஸ்புல் அமைப்பினர் நசீரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தியாவில் இருக்கும் இவரின் நண்பர்களின் வழிகாட்டுதலின் பேரில் நேபாளம் வழியாக ஊடுருவ முயன்ற போது தீவிரவாதி நசர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து பாகிஸ்தான் கடவுச்சீட்டு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்