சுகாதார பொருட்களை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: பசுமைக் கட்சி

தமது ஆட்சியின் கீழ் நிதி தேவையை எதிர்நோக்கியுள்ள பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார பொருட்கள் இலவசமாக பெற்றுக் கொடுக்கப்படும் என பிரித்தானியா மற்றும் வேல்ஸின் பசுமை கட்சி அறிவித்துள்ளது.

சுகாதார பொருட்கள் மீது 5 வீத வரி விதிக்கப்பட்ட நிலையில் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே பசுமைக் கட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போது வரி விலக்களிக்கப்பட்டுள்ள சில பொருட்களுக்கு வரி விதிப்பதன் மூலம் இந்த திட்டத்திற்கு நிதியளிக்க முடியும் என்றும் குறித்த கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.

சுகாதார நிறுவனங்களுடன் இத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடி சுகாதார பொருட்களை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்