சீனாவின் முதலீடுகளை வரவேற்கிறது இலங்கை! (photo)

இலங்கையில் பிரதான உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவின் முதலீடுகளை வரவேற்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பீஜிங்கில் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கை சந்தித்துப் பேச்சு நடத்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்று சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி ஊடகமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
அம்பாந்தோட்டை, கொழும்புத் துறைமுகநகரத் திட்டங்களை வெற்றிகரமாக முன்நோக்கி நகர்த்துவதற்கு சீனாவுடன் இணைந்து பணியாற்ற இலங்கை விரும்புகின்றது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
“சீன – இலங்கை  சுதந்திர வர்த்தக வலயக் கட்டுமானமானது இருதரப்பு வர்த்தகத்தில் நியாயமான மற்றும் நிலையான அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கான முக்கியமான தொடக்கப் புள்ளியாக இருக்கும். இது முதலீடுகளை எளிதாக்கும்” என்று சீனா ஜனாதிபதி ஷி ஜின் பிங் தெரிவித்துள்ளார் என்றும் சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்