காணாமல்போனோர் விடயத்தில் அரசின் அசமந்தப்போக்கு நம்பிக்கையை உடைக்கும்! – பிட்டோ பெர்னாண்டோ எச்சரிக்கை (photos) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உடனடியாக உரிய பதிலை அளிக்காதவிடத்து இந்த அரசு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை உடைந்துபோய்விடும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காணாமால்போனோர் சட்டமூலத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு ஒரு பதிலை அரசு வழங்கவேண்டும் எனக் கோரியும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கான மகஜரை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் ஒன்றியத்தால் நேற்றுக் கையளிக்கப்பட்டது. இதன்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் ஒன்றியத் தலைவர் பிட்டோ பெர்னாண்டோ மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், சகோதரர்களின் கையொப்பங்கள் இடப்பட்ட மகஜரை 25 சிவில் அமைப்புகளின் ஆதரவுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் ஒன்றியம் இன்று (நேற்று) ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளது. காணாமல்போனோர் அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு எட்டு மாதங்கள் கடந்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணியின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் இந்த அரசுக்கு இருந்த முதுகெலும்பின் அடிப்படையில் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தது. அன்று அனைத்து சிவில் அமைப்புகளும் இதற்கு வரவேற்பளித்திருந்தன. நாங்கள் எதிர்பார்த்த அனைத்தும் அதில் இல்லாவிடினும் உறவுகள் எதிர்பார்த்திருந்த சில விடங்களை அதில் பூர்த்திசெய்துகொள்ளக் கூடியதாக உள்ளது. காணாமல்போனோர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் பயணிக்க இதனை ஒரு வழியாகவும் நாங்கள் கருதினோம். ஆனால், எட்டு மாதங்கள் கடந்து இந்தச் சட்டமூலம் நடைமுறைக்கு வரவில்லை. சர்வதேச விசாரணையைக் கோருகின்றனர், நீதியை நிலைநாட்டுவதில் அரசு மீது நம்பிக்கை இல்லை என்ற வாதங்கள் மேலோங்கியுள்ளன. அரசு நிறைவேற்றியுள்ள இந்தச் சட்டமூலத்தில் காணாமல்போனோர் தொடர்பில் உண்மை வெளிக்கொண்டு வரப்படுமாயின் இந்த அரசு மீது மக்கள் நம்பிக்கை கொள்வர். எனவே, இதனை சுலபமாக ஜனாதிபதியால் செய்யமுடியும். குறித்த அலுவலகத்தை எந்த அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று அவர் உடனடியாக தீர்மானித்து சட்டமூலத்தை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும். இந்த அலுவலகம் இயங்குவதற்கான நிதியை வழங்கவும் கடந்த வரவு செலவுத்திட்டத்தில் ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்டிருந்தன. ஜூலை மாதம் 5ஆம் திகதி நாங்கள் காணாமல்போனோரின் உறவுகளை கொழும்புக்கு அழைத்து வருவோம். அப்போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் நேரடியாக விஜயம் செய்து இந்த விடயம் தொடர்பில் நேரில் கருத்துகளைத் தெரிவிக்கவேண்டும். அரசு மீது நாங்கள் நம்பிக்கை வைக்க தொடர்ந்தும் தயாராகவே உள்ளோம். எனவே, இதற்குரிய பதிலை அரசு வழங்கி நல்லிணக்கத்தின் அடுத்தகட்டத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்லவேண்டும். இல்லாவிடின் இந்த அரசு மீதான மக்கள் நம்பிக்கை உடைந்துபோய்விடும்” – என்றார்.

காணாமல்போனோர் விடயத்தில் அரசின் அசமந்தப்போக்கு நம்பிக்கையை உடைக்கும்! – பிட்டோ பெர்னாண்டோ எச்சரிக்கை (photos) 
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உடனடியாக உரிய பதிலை அளிக்காதவிடத்து இந்த அரசு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை உடைந்துபோய்விடும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின்  குடும்பங்களின் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காணாமால்போனோர் சட்டமூலத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும், காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவினர்களுக்கு ஒரு பதிலை அரசு  வழங்கவேண்டும் எனக் கோரியும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கான  மகஜரை  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின்  குடும்பங்களின் ஒன்றியத்தால் நேற்றுக் கையளிக்கப்பட்டது.
இதன்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே காணாமல் ஆக்கப்பட்டோரின்  குடும்பங்களின் ஒன்றியத் தலைவர் பிட்டோ பெர்னாண்டோ  மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், சகோதரர்களின் கையொப்பங்கள் இடப்பட்ட மகஜரை 25 சிவில் அமைப்புகளின் ஆதரவுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின்  குடும்பங்களின் ஒன்றியம் இன்று (நேற்று) ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார  அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளது.
காணாமல்போனோர் அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு எட்டு மாதங்கள் கடந்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணியின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் இந்த அரசுக்கு இருந்த முதுகெலும்பின் அடிப்படையில் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அன்று அனைத்து சிவில் அமைப்புகளும் இதற்கு வரவேற்பளித்திருந்தன. நாங்கள் எதிர்பார்த்த அனைத்தும் அதில் இல்லாவிடினும் உறவுகள் எதிர்பார்த்திருந்த சில விடங்களை அதில் பூர்த்திசெய்துகொள்ளக் கூடியதாக உள்ளது. காணாமல்போனோர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் பயணிக்க இதனை ஒரு வழியாகவும் நாங்கள் கருதினோம்.
ஆனால், எட்டு மாதங்கள் கடந்து இந்தச் சட்டமூலம் நடைமுறைக்கு வரவில்லை. சர்வதேச விசாரணையைக்  கோருகின்றனர், நீதியை நிலைநாட்டுவதில் அரசு மீது நம்பிக்கை இல்லை என்ற வாதங்கள் மேலோங்கியுள்ளன. அரசு நிறைவேற்றியுள்ள இந்தச் சட்டமூலத்தில்  காணாமல்போனோர் தொடர்பில் உண்மை வெளிக்கொண்டு வரப்படுமாயின் இந்த அரசு மீது மக்கள் நம்பிக்கை கொள்வர்.
எனவே, இதனை சுலபமாக ஜனாதிபதியால் செய்யமுடியும். குறித்த அலுவலகத்தை எந்த அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று அவர் உடனடியாக தீர்மானித்து சட்டமூலத்தை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும். இந்த அலுவலகம் இயங்குவதற்கான நிதியை வழங்கவும் கடந்த வரவு  செலவுத்திட்டத்தில் ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்டிருந்தன.
ஜூலை மாதம் 5ஆம் திகதி நாங்கள் காணாமல்போனோரின் உறவுகளை கொழும்புக்கு அழைத்து வருவோம். அப்போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் நேரடியாக விஜயம் செய்து இந்த விடயம் தொடர்பில் நேரில் கருத்துகளைத் தெரிவிக்கவேண்டும்.
அரசு மீது நாங்கள் நம்பிக்கை வைக்க  தொடர்ந்தும் தயாராகவே உள்ளோம். எனவே, இதற்குரிய பதிலை அரசு வழங்கி நல்லிணக்கத்தின் அடுத்தகட்டத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்லவேண்டும். இல்லாவிடின் இந்த அரசு மீதான மக்கள் நம்பிக்கை உடைந்துபோய்விடும்” – என்றார்.

– பிட்டோ பெர்னாண்டோ எச்சரிக்கை (photos) 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்