முறையாக நிர்மாணிக்கப்படாத புகையிரதக்கடவைகளை திருத்தி அமைக்க வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் முடிவு!

வவுனியாவில் இலங்கை புகையிரதப்பகுதியினரால் அமைக்கப்பட்டுள்ள புகையிரதக்கடவைகள் பல முறையாக நிர்மாணிக்கப்படாதுள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் நேற்று நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
குறிப்பாக பூங்காவீதி- வைரவபுளியங்குளம் கடவை, சிங்கள பிரதேச சபை வீதி- குருமண்காடு கடவை, தாண்டிக்குளம்- திருநாவற்குளம் கடவைகள் உட்பட வவுனியாவிலிருந்து ஓமந்தை வரையான புகையிரதக்கடவைகள் ஒழுங்கானமுறையில் நிர்மாணிக்கப்படவில்லையென்றும், தண்டவாளம் வீதிக்கு மேலாக தெரிவதாகவும் இதனால் பயணிக்கும் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள், பாடசாலை செல்லும் மாணவர்கள் பெரிதும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் இதனை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டக்கொண்டார். இதனை ஏற்ற மாவட்ட ஒருங்கிணைப்’புக்குழு இது தொடர்பில் புகையிரதத் திணைக்களத்தை நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து இலங்கை புகையிரத திணைக்களத்தின் அதிகாரிகள் மேற்படி இடங்களுக்கு விஜயம்செய்து அவற்றை பார்வையிட்டு அதனை திருத்தி அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்