தொழிலதிபரிடம் 100 கோடி நஷ்டஈடு கேட்ட பாலிவுட் நடிகை

சினிமா துறை என்றாலே வதந்திகளுக்கு பஞ்சமில்லை. காதல் கிசுகிசு தொடங்கி அடுத்து யாருடன் பணியாற்றுகிறார்கள் என்பது வரை தினமும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கும்.

அப்படி ஒரு தவறான குற்றச்சாட்டு வைத்தவர் மீது 100 கோடி மானநஷ்ட வழக்கு போட்டுள்ளார் பிரபல பாலிவுட் நடிகை. நடிகை ஷில்பா ஷெட்டி தான் இப்படி செய்துள்ளார்.

ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குன்ரா தனக்கு 24 லட்சம் பணம் தராமல் ஏமாற்றுவதாக பிரபல தொழிலதிபர் ரவி மோகன்லால் புகார் பதிவு செய்திருந்தார். நான் சட்டத்திற்கு உட்பட்டே நடப்பதாக ராஜ் குன்ரா அதற்கு விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் தங்கள் புகழுக்கு களங்கம் விளைவித்ததாக மோகன்லால் மீது மானநஷ்ட வழக்கு போட்டுள்ளனர், அதில் அவர் 100 கோடி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்