வவுனியா விபுலாநந்தா கல்லூரியின் துடுப்பாட்ட, எல்லே அணிகளுக்கான வர்ண சீருடை வழங்கல்.(படங்கள் இணைப்பு)

வ/விபுலாநந்தா கல்லூரியின் துடுப்பாட்ட மற்றும் எல்லே அணிகளுக்கான கல்லூரியின் வர்ண சீருடை அறிமுக விழா முதல்வர் திருவாளர் எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் 16.05.2017 அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.
இவ் வர்ண சீருடைகளை பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக கல்லூரி பழைய மாணவன்    பொறியியலாளர் திரு.எ.நிலின்ஸ் அவர்கள் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிகழ்வில் பழைய மாணவனும் வவுனியா மாவட்ட இளைஞர் சம்மேளனத் தலைவருமான திரு சு.காண்டீபன், பழைய மாணவர் சங்க பொருளாளர் திரு.எஸ்.கார்த்திக், பழைய மாணவன் திரு வ.பிரதீபன் ஆகியோர் பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்