ட்ரம்ப்- ரஷ்ய உறவு குறித்து ஆராய விசேட சட்ட ஆலோசகர் நியமனம்.

அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான விசேட சட்ட ஆலோசகராக, அமெரிக்க புலனாய்வு துறையின் முன்னாள் பணிப்பாளர் றொபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கோரப்பட்டு வந்த நிலையில், அமெரிக்க நீதித்துறையினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி விடயம் தொடர்பில் விசாரணை நடத்திவந்த அமெரிக்க புலனாய்வு துறையின் தலைவர் ஜேம்ஸ் கோமி பதவிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்தே, விசாரணைகளை முன்னெடுக்க கோரி அழுத்தம் வலுத்தது.

2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு காணப்பட்டதாக அமெரிக்க புலனாய்வுத் துறையினர் குறிப்பிட்டிருந்த போதிலும், அக்குற்றச்சாட்டை ரஷ்யா நிராகரித்திருந்தது. அதேவேளை, ரஷ்யாவுடன் எவ்வித இணக்கப்பாடும் இல்லை என ட்ரம்ப் தரப்பும் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்