பயணி ஒருவர் கதவை திறக்க முயன்றதால் திசை திருப்பபட்ட விமானம் !

ஜமேக்காவிலிருந்து ரொறொன்ரோ வந்து கொண்டிருந்த எயர் கனடா விமானம் ஒன்று ஒலான்டோ, வுளொரிடாவிற்கு திசை திருப்ப பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணி ஒருவர் கதவை திறக்க முயன்றதால் விமானம் திசை திருப்பபட்டது!

ஆக்ரோஷமடைந்த பயணி ஒருவர் பணியாளரை கோப்பி பாத்திரங்களால் தாக்கி கபின் ஒன்றின் கதவை திறக்க முனைந்ததை தொடர்ந்து விமானம் திசை திருப்ப பட்டதென தெரிவிக்கப்பட்டது.

மத்திய குற்றவியல் புகார் பணி குழு, அங்கத்தவர்கள் மற்றும் ஏனைய பயணிகள் பிரான்டன் மைக்கேல் கோனியாய என்ற குறிப்பிட்ட நபரை ஷிப் பட்டிகையால் உறுதியாக பிடித்து கொண்டதாக தெரிவிக்கின்றது.

இவர் பயணிகளை நோக்கி சத்தம் போட்டதாகவும் கூறப்படுகின்றது. பின்னர் கண்ணில் பட்ட கோப்பி பானை ஒன்றை எடுத்து குழு அங்கத்தவர்களை நோக்கி வீசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

பின்புற கதவொன்றையும் திறப்பதற்கு முனைந்துள்ளார். இவர் மீது பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதுடன் மத்திய அதிகாரிகள் இவரை கைது செய்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்