கருணாநிதியின் வைர விழா நிகழ்வில் ராகுல்காந்தி பங்கேற்பு

தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் வைர விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக ராகுல்காந்தி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மூத்த அரசியல்வாதியான தி.மு.க தலைவர் கருணாநிதி, சட்டப்பேரவைக்குள் காலடி எடுத்துவைத்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்த வைர விழாவை கருணாநிதியின் பிறந்த தினமான எதிர்வரும் 3ஆம் திகதி  மிகப் பிரம்மாண்டமாக கொண்டாட தி.மு.க திட்டமிட்டுள்ள நிலையில், பல மாநில முதல்வர்கள் உள்ளிட்ட நாட்டின் மூத்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்