வேல்ஸ் முன்னாள் முதல் அமைச்சர் காலமானார்!

சுமார் ஒரு தசாப்த காலமாக முதல் அமைச்சராக சேவையாற்றிவந்த, வேல்ஸின் முன்னாள் முதல் அமைச்சர் றொட்றி மோர்கன் தனது 77ஆவது வயதில் நேற்று (புதன்கிழமை) காலமானார்.

இந்நிலையில், வேல்ஸ் நாட்டின் அதிகாரத்துவத்தின் தந்தையை மக்கள் இழந்துள்ளதாக வேல்ஸ் முதல் அமைச்சர் கோர்னி ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல் அமைச்சரின் மறைவை முன்னிட்டு இன்றைய தினம் பொதுத் தேர்தல் பிரசாரங்கள் எதுவும் இடம்பெறமாட்டாது என வேல்ஸ் தொழிலாளர் கட்சியின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

1939ஆம் ஆண்டு பிறந்த இவர், 1987ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு, பின்னர் 2000ஆம் ஆண்டு வேல்ஸ் முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டு 2009ஆம் ஆண்டுவரை அப்பதவியில் மக்களுக்காக பெரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்