யுத்த பூமி

வரண்ட மேகம் ஒன்று
திரண்டு வருகிறது
மழை பொழிய
நிலம் தேடுகிறது
வரட்சியான அந்த தேசமதை
கடந்து செல்ல பார்க்கிறது
அதற்கு ஒரு சந்தேகம்
இத்தேசத்தில் மனிதர்கள்
வாழ்கிறார்களா
குண்டு மழை பொழிந்து
பிணங்களால்
மூடப்பட்டு இரத்தத்தால்
ஆறுகள் ஓடுகிறது
பிணவாடை வீசும்
படர்ந்த புற்தரைகள்
நீண்ட அலகுகளுடன்
விகாரமடைந்த பட்சிகள்
இடிந்துபோன கட்டிடங்கள்
கருகிப்போன பூ மரங்கள்
தலைவிழுந்த பனைகள்
நிலைகுலைந்த தென்னைகள்
குழிவிழுந்த ஒட்டிப்போன மெலிந்த
வயதான சில மனிதர்கள் ஆங்காங்கே
அனைத்தும் புதுமையே
இடிமின்னல் இடிக்கவில்லை
மேகமும் கருக்கவில்லை
ஓவென்று அழத்தொடங்கி விட்டது
தன்னால் தாங்கிக்கொள்ள முடியாமல் ..!!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்