ஈரானில் நாளை ஜனாதிபதி தேர்தல்: இறுதிக்கட்ட பிரசாரங்கள் மும்முரம்

ஈரானில் நாளை (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தெஹ்ரானில் நேற்றைய தினம் இறுதிக்கட்ட பிரசாரங்கள் மும்முரமாக இடம்பெற்றிருந்தன.

தேர்தலில் ஈரானின் தற்போதைய ஜனாதிபதி ரௌகானி மற்றும் கடும்போக்கு இஸ்லாமிய  மதகுருவான இப்ராஹிம் ரைசி ஆகியோருக்கு இடையில் பலத்த போட்டி நிலவுகின்றது.

ஈரானின் சர்வதேச தனிமைப்படுத்தலை குறைத்தல், மக்களுக்கு அதிக சுதந்திரங்களை வழங்குதல் போன்ற உறுதி மொழிகளுடன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரௌஹானி மூன்று மடங்கு அதிகமான வாக்குகளை பெற்று வெற்றிபெற்றிருந்தார்.

இந்நிலையில் இம்முறை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ரௌகானி, ஈரானுக்கு வெளிநாட்டு உதவிகள் தேவையில்லை என்றும் 1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியின் மறுமலர்ச்சியை மறுபரிசீலனை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்