வௌ்ளவத்தையில் 5 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 23 பேர் காயம்

காயமடைந்தவர்களில் 14 பேர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையோர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களே அதிகளவில் காணப்படுகின்றனர்.

தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றியுள்ளதாக தேசிய வைத்தியசாலையில் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, ஆறு தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைப் பகுதி குறிப்பிட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்