கிளிநொச்சியில் மஹாசேன் பலகாய  அட்டகாசம்.

 எஸ்.என்.நிபோஜன்

இன்று காலியில் இருந்து  கிளிநொச்சிக்கு  பேருந்து  ஒன்றில் வந்த  மஹாசேன் பலகாய சிங்கள  இனவாதக் கும்பல்  ஒன்று  கிளிநொச்சி நகரின் நடுவில்  உள்ள மின்கம்பங்களில்  இலங்கையின்  தேசியக் கொடியில்  முஸ்லீம் மற்றும்  தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்  படுத்துகின்ற  இரு நிறங்களும் அற்ற இலங்கை தேசியக்கொடிகளை  பறக்கவிட்டு யாழ் நோக்கி  தப்பி ஓடி உள்ளனர்.
யுத்தத்தினால்  பாதிக்கப்பட்டு  மீண்டு நல்லிணக்கத்துடன்  இன மத பேதமின்றி வாழ்ந்து  கொண்டுள்ள  கிளிநொச்சி மக்களின் மனதை காயப்படுத்தியதுடன்  இனவாதத்தையும் குறித்த  கும்பல் வித்தைத்து சென்றுள்ளது என கிளிநொச்சி மாவட்ட  மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்