வௌிநாட்டு சிகரெட்டுக்களை கடையில் விற்பனை செய்தவருக்கு அபராதம்.

(அப்துல்சலாம் யாசீம்)

வௌிநாட்டு சிகரெட்டுக்களை கடையில் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கடை உரிமையாளரை  30 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு இன்று (18) திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.
இவ்வாறு அபராதம்  விதிக்கப்பட்டவர் திருகோணமலை.ஏகாம்பரம் வீதி.முருகாபுரியைச்சேர்ந்த என்.எஸ்.சிவமூர்த்தி (67வயது) எனவும் தெரியவருகின்றது.
வௌிநாட்டு சிகரெட்டுக்களை கடையில் விற்பனை செய்து வருவதாக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது 820 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடை உரிமையாளரான என்.எஸ்.சிவமூர்த்தி தான் வரி செலுத்தாமல் வௌிநாட்டிலிருந்து கொண்டு வந்த சிகரெட்டுக்களை விற்பனை செய்தமை குற்றமென நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்