ஹெரோயினுடன் மூவர் கைது

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மரத்தடி மற்றும் சமுத்ரா கம பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேரை நேற்றிரவு (17) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரத்தடி சந்தியில் 20 மில்லி கிரேம் ஹெரோயின் பக்கெட் இரண்டுடன் 22 வயது மற்றும் 23 வயது இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருகோணமலை.கோட்டை வீதி.சமுத்ரா கம பகுதியைச்சேர்ந்த எம்.எஸ்.விமலசிறி (65வயது) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் ஆஜர்படுத்திய வேளை இரு இளைஞர்களுக்கும் ஒன்பதாயிரம் ரூபாய் வீதம் 18 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் 65 வயதுடைய எம்.எஸ்.விமலசிறிக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும் கட்டத்தவறினால் 06 மாத கடூழிய சிறை தண்டனை விதிக்குமாறும் முன் குற்றம் இருப்பதாக தலைமையக பொலிஸாரினால் தெரிவிக்கப்படுத்தியதையடுத்து ஒரு வருட கடூழிய சிறை தண்டனையை 10 வருடத்திற்கு ஒத்திவைக்குமாறும் பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா கட்டளையிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்