காரைதீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஜெயசிறில் தலைமையில்: பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் பங்கேற்பு.

முள்ளி வாய்க்காலில் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்
8 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (18.05.2017) , காரைதீவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டக்காரியாலயத்தில் திரு.k.ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்றது.
இதில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திரு.ரவிந்திரன் கோடிஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டார்.
நினைவேந்தல் நிகழ்வானது சுடர் ஏற்றும் நிகழ்வுடன் ஆரம்பமாகி அதனைத்தொடந்து 5நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது மற்றும் உரைகள் இடம்பெற்று நிகழ்வு நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டதை காணக்கூடியதாக இருந்தது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்