நுவரெலியாவில் பஸ் விபத்து.

(க.கிஷாந்தன்)

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 16 பேர் படுங்காயங்பட்டு நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியாவிலிருந்து பட்டிப்பொல நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று 18.05.2017 அன்று மதியம் நுவரெலியா வெலிமடை பிரதான வீதியில் கட்டுமான பகுதியில் பிரதான வீதியை விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த சாரதி உட்பட 16 பேரும் படுங்காயம்பட்டு நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்