ஊடக அறிமுகமும் உள்நுழைதலும் என்ற தொனிப்பொருளில், ஊடக செயலமர்வு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்.

துறையூர் தாஸன்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழிப் பீட தலைவர் எஸ்.எம்.மஸாகீர் தலைமையிலும் முஸ்லிம் மஜ்லியின் ஏற்பாட்டிலும் ஒழுங்குசெய்யப்பட்ட ஊடக அறிமுகமும் உள்நுழைதல் தொடர்பானதுமான செயலமர்வு, அரபு மொழிப் பீட கேட்போர்கூடத்தில் (17)  மாலை இடம்பெற்றது.

சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜெஸ்மி எம்.மூஸா முதன்மை அதிதியாகவும் வளவாளராகவும் கலந்து கொண்டு,நவீன ஊடகங்களும் முஸ்லிம்களும் என்ற தொனிப்பொருளில்  செயலமர்வினை முன்னெடுத்திருந்தார்.

மிக முக்கியமாக அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் ஊடக விதிமுறை மற்றும் ஊடக மொழியுடன் செயற்படுவதனுடன் ஊடகவியலாளர்கள் தங்களை சமூகமயமாக்கத்துக்கேற்ப நட்சத்திர ஆளுமையாளர்களாகவும் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்ற விளக்கமும் அளிக்கப்பட்டது.

அரபு மொழிப் பீட மாணவர்கள், ஊடகம் தொடர்பாக தங்களுக்கு ஏற்பட்ட ஐயங்களை இதன்போது தெளிவுபடுத்திக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்