நெருப்புடா!!

நானாமார் கடையென்றால்
தானாக எரியனும்
காணாத நேரத்தில்தான்
கட்டாயம் எரியனும்

அன்சாரு நானா கடை
ஆகவும் பெரிசென்றால்
மின் ‘சார’க் கசிவால
மிச்சமின்றி எரியும்

மின் ‘சார’க் கசிவா
மிருக ‘சார’க் கசிவான்னு
வெறி சாரா மனிதருக்கு
விளக்கமாய்த தெரியும்

கமராப் பதிவுகள்
காணாமல் போய்விடும்
காமரா ஸ்விட்ச் போர்ட்டை
கருப்பாக்கிக் காட்டப் படும்

தீ வைத்தான் கடைக்கு
தீவையே நாசமாக்க
சாவைத்தான் அடைவான்
சதிகாரன் கேவலமாய்.

ஒரு நாள் உருவாகும்
உண்மை வெளியே வரும்
மறுமையின் நெருப்பு வரும்
பொறுமைக்கு கூலி வரும்.
Moahmed Nizous

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்