அஜித்தின் விவேகம் படத்திற்காக காத்துக் கொண்டிருக்க முடியாது- பிளான் மாறியது

அஜித்தின் விவேகம் படம் மாஸாக தயாராகி இருக்கிறது. அப்படத்தின் டீஸரை பார்க்கும் போதே தெரிகிறது படம் வேறலெவலில் வந்திருக்கிறது என்று.

இந்நிலையில் அஜித்தின் விவேகம் படம் மூலம் புதுப்பிக்கப்பட்டிருக்கும் தங்களது திரையரங்கை திறக்க பிரபல திரையரங்கம் முடிவு செய்திருந்தது.

ஆனால் திரையரங்க வேலைகள் முடிவுக்கு வந்த நிலையில், அஜித்தின் விவேகம் படம் வரை காத்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் ஜுன் 2 அல்லது ஜுன் 9ல் திரையரங்கை திறக்க முடிவு செய்திருப்பதாக திரையரங்க உரிமையாளர் கூறியுள்ளார்.

அன்றைய நாளில் ஜோதிகாவின் மகளிர் மட்டும் படம் வெளியாக இருப்பதால் அன்றே திரையரங்கை திறப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்