தென் கொரிய தூதுவருடன் சீன ஜனாதிபதி சந்திப்பு

தென்கொரிய தூதுவர் லீ ஹே சான் சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங்கை நேற்று (வெள்ளிக்கிழமை) பீஜிங்கில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சீனாவுடன் நல்லுறவுகளை மேம்படுத்தும் வகையில், தென் கொரியாவின் புதிய ஜனாதிபதி மூன் ஜே இன் அவர்களால் தூதுவர் லீ ஹே சான் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதிலும் சியோலுடன் சாதாரணமான வகையில் மீண்டும் உறவுகளை வைத்திருப்பதற்கு தாம் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்த்து, தென்கொரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் THAAD ஏவுகணை எதிர்ப்பு அமைப்புக்கு சீனா கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தது. இந்த ஏவுகணை எதிர்ப்பு அமைப்பானது சீன பிராந்தியத்தில் உளவு பார்க்க முடியும் என்றும் தேசியவாத பின்னடைவுகளால் தென் கொரிய நிறுவனங்கள் சீனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீனா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்