ஐடியூன் சேவையினை இனி விண்டோஸ் ஸ்டோரிலும் பெறலாம்!

முன்னணி நிறுவனமான அப்பிள் நிறுவனம் வழங்கி வரும் ஐடியூன் சேவையில், பல்வேறு மொழிகளிலான பாடல்கள் கிடைக்கப்பெறுகின்றன. இந்த சேவையினை நீண்ட காலமாக அப்பிள் சாதனங்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருந்தது.

இந்நிலையில், ஐடியூன் சேவையினை பிரபல்யமான விண்டோஸ் ஸ்டோரின் ஊடாக வழங்க மைக்ரோசொப்ட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்காக அப்பிள் நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிவதாகவும் இதனால் விண்டோஸ் பாவனையாளர்கள் அதிகம் பயனடைவர்கள் எனவும் மைக்ரோசொப்ட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்