கொன்சர்வேட்டிவ்வின் புதிய சமூக பாதுகாப்பு கொள்கைகள் முதியவர்களை பாதிக்கும்: ஜெரமி கோர்பின்

பிரித்தானிய அரசாங்கத்தின் புதிய சமூக பாதுகாப்பு கொள்கையானது முதியோர்களை பாதிக்கும் வகையில் அமைந்திருப்பதாக தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே புதிய சமூக பாதுகாப்பு கொள்கைகளை உள்ளடக்கிய தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையை நேற்று வெளியிட்டிருந்த நிலையில், அது குறித்து லண்டனில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்  போதே ஜெரமி கோர்பின் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இத குறித்து அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ‘ தெரேசா மே எமது தேசத்தில் உள்ள அனைத்து முதியவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றார். கொன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையானது பிரித்தானியாவில் மோசமான நிலையை உருவாக்கும் ஒரு அறிக்கையாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்