ஆண்டுகள் கடந்தாலும் ஆறாப்பெரும் துயரமாக ஈழ விடுதலையின் இறுதிநாட்கள் வரலாறில் இடம்பெறும் ! பா .உ .அங்கஜன் இராமநாதன்

ஆண்டுகள் பல கடந்தாலும் ஆறாப்பெரும் துயரமாக ஈழ விடுதலையின் இறுதிநாட்கள் வரலாற்றில் இடம்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றில் இன்று தெரிவித்துள்ளார். மண் மீட்பு போரின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நிகழ்வொன்றில் அஞ்சலி செலுத்தி உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என அறிய முடிகிறது .

அவர் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கையில் , . 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலோடு முடக்கப்பட்ட போரின் போது இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு அவர்களின் பொருளாதார கட்டமைப்பு முழுவதுமாக சீரழிக்கப்பட்டது . எமது மக்கள் 2009 இல் அடைந்த துன்ப துயரங்கள் போல வேறெந்த நாட்டிலும் இன அழிப்பின் போதோ அல்லது உள்நாட்டு யுத்தத்தின் போதோ யாரும் அடையவில்லை என்பதை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது . இது உணர்வுகள் தொடர்பான உன்னத விடயம் இதை உள்ளத்தால் உணர்வுகளால் பார்த்தால் தான் அதன் உணர்வுரீதியான வலி புரியும் . இங்கே எமக்காக கொல்லப்பட்டவர்கள் சிதைக்கப்படதாய் யாரும் எண்ணலாம் . ஆனால் அவர்கள உணர்வுமிக்க ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் நாடுகடந்து கண்டம் கடந்து விதைக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை .

தாயகப்போரின் போது கொல்லப்பட்ட எமது மக்களின் கோரிக்கைகள், அபிலாசைகள் எல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும் . அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளை இழந்ததன் விளைவை நாம் அனுபவிக்க வேண்டும் இதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை. ஆகவே மக்களின் உணர்வு பூர்வமான கனவுகள் பலிக்கும் என்ற நம்பிக்கையோடு முள்ளிவாய்க்காலில் எமக்காகவும் போரின் போதும் இறந்த அனைவரதும் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்றார் .

அங்கஜன் ராமநாதனின் தலைமை செயலகத்தில் இன்று உணர்வு பூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அவரது ஆதரவாளர்களினால் அனுஸ்டிக்கப்பட்டது . இந்நிகழ்வில் அவரது யாழ்மாவட்ட இளைஞர் அணியின் அமைப்பாளர் செல்வம் கஜந்தன் மற்றும் இணைப்பாளர்கள் அலுவலக பொறுப்பாளர்கள் அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் சுதந்திர ஆசிரியர் சங்கம் இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம் பட்டதாரிகள் சங்கம் அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் மற்றும் தொழில் சங்கப்பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்