எம்.எல்.ஏ.,க்களுக்கு ரூ.10 கோடி: சரவணன் எம்.எல்.ஏ., புகார்

சென்னை: சசிகலா அணியில் எம்.எல்.ஏ.க்களை சேர்க்க பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோருக்கு தலா ரூ. 10 கோடி பணம் தரப்பட்டதாகவும் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டி.வி.சேனலில் சரவணன் எம்.எல்.ஏ., அளித்த விளக்கம் ரகசியமாக வெளிவந்துள்ளது.கூவத்துாரில் நடந்தது என்ன…கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ., சரவணன் கூறியது: கூவத்தூர் சொகுசு விடுதியில் அடைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்கள் கூட்டத்திலிருந்து, மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் தப்பி வந்து பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்.அதில் கூவத்தூர் முகாமில் எந்தத் தவறும் நடக்கவில்லை. யாரையும் மிரட்டவில்லை. அடிக்கவில்லை. தண்ணி (மது) இருந்துச்சு. கருணாஸ் குடித்தார்.சொந்த ஊரில் இருந்து வந்த எம்.எல்.ஏ.க்களை விமானநிலையத்தில் மடக்கி, விமான நிலையத்தில் பேருந்தில் ஏற்றியபோது எம்.எல்.ஏ.வுக்கு தலா ரூ.2 கோடி என பேரம் பேசினார்கள்.

பிறகு பின்னர் எம்.எல்.ஏ. விடுதியில் இருந்து கவர்னரை சந்திக்க சென்றபோது பேரம் ரூ.4 கோடியானது. கூவத்தூர் சேர்ந்தபோது எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.6 கோடி தர முன்வந்தனர்.ரூ. 10 கோடிஒரே நேரத்தில் பல கோடி திரட்ட முடியாது என்பதால் தங்கமாக தருவதாக கூறினார்கள்.

தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்ற கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு சரவணன் கூறியுள்ளது வெளிவந்துள்ளது.வெற்றிவேல் மறுப்புஇது குறித்து வெற்றி வேல் எம்.எல்.கூறுகையில், பணம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்ணமையில்லை பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் சரவணன். திட்டமிட்டே இது பரப்ப பட்டு வருகிறது. யாரும் பணம் வாங்கவில்லை என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்