தவறான கணிப்பு-எழுதிய பக்கங்களை தின்ற எழுத்தாளர்

நடந்து முடிந்த பிரித்தானிய பொதுத் தேர்தல் முடிவுகளில் தன்னுடைய தவறான கணிப்புக்கு தண்டனையாக, தான் எழுதிய புத்தகத்தின் பக்கங்களையே எழுத்தாளர் ஒருவர் தின்று முழுங்கிய வினோதம் நிகழ்ந்துள்ளது.

பிரித்தானியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு, 38 சதவீதத்துக்கு குறைவான ஓட்டுகளே கிடைக்கும் என்று பிரபல எழுத்தாளர் மேத்யூ குட்வின் கணித்திருந்தார்.

கணிப்பு நடக்காவிட்டால், தான் எழுதிய புத்தகத்தை தின்பேன் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால், சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு 40.3 சதவீத ஓட்டுகள் கிடைத்தன.கணிப்பு பொய்த்துப் போனதை அடுத்து சமூக வலைதளங்களில் மேத்யூ கிண்டலடிக்கப்பட்டார்.

இந்நிலையில் தனியார் செய்தி ஊடகத்தின் நேரடி நிகழ்ச்சியில் தோன்றிய மேத்யூ ‘என் கணிப்புக்கு மாறாக, 2 சதவீத ஓட்டுகளை, தொழிலாளர் கட்சி அதிகம் பெற்றுள்ளது.

இதான் நான் சொன்னபடி, எழுதிய புத்தகத்தை தின்று விடுகிறேன்’ என்று கூறிய மேத்யூ புத்தகத்தை கடித்து முழுங்கினார். இச்சம்பவம் பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்