தாயகத்தின் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் புலம்பெயர் தமிழ் அமைப்பின் கவயீர்ப்பு போராட்டம்.

யதுர்சன் – பிரித்தானியா —

தாயகத்தில் இலங்கை இராணுவத்தால் திட்டமிட்டு கையகப்படுத்தப்பட்ட தமது நிலங்களை மீளத்தருமாறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான உண்மை நிலையினை அறிந்து கொள்ளவும் தாயக உறவுகளின் கரங்களை வலுப்படுத்த புலம்பெயர் தேசங்களில் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் நடைபெற்றது .
12.06.2017 இன்றைய தினம் பிரித்தானியாவில் தலைநகர் லண்டனில் மதியம் 1.00 முதல் மாலை 7 மணி வரையும் இந்த கவயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பெருமளவிலான புலம்பெயர் தமிழ் மக்கள் கலந்து கலந்துகொண்டுள்ளதுடன் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஷங்களும் முழக்கப்படடமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்