தன்னை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறும் பிரபல நடிகை!!

நடிகையும், மாடலுமான பூஜா மிஸ்ரா தன்னை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகளின் செல்லப் பிள்ளை என்றால் அது பாலிவுட் நடிகையும், மாடலுமான பூஜா மிஸ்ரா தான்.


அந்த அளவுக்கு சர்ச்சையை கிளப்புவது, சர்ச்சையில் சிக்குவதுமாக உள்ளார்.

இந்நிலையில் அவர் புது குண்டு ஒன்றை போட்டுள்ளார்.

பூஜா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூருக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

டிவி நிகழ்ச்சியை படமாக்க வந்த வீடியோக்காரர்கள் 3 பேர் தனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பூஜா குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த பூஜா அங்கிருந்த சில பொருட்களை உடைத்துள்ளார். உடைத்த பொருட்களுக்கு பணம் கேட்ட ஹோட்டல் ஊழியரை தாக்கினார்.

மும்பையில் அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலும் ரகளை செய்துள்ளார். இதனால் அவரை குடியிருப்பு பகுதிக்குள் வரக் கூடாது என்று அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்