பாஷையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த தேர்ப்பவனி

யாழ்ப்பாணத்திலுள்ள யாத்திரைத் தலங்களின் ஒன்றான பாஷையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவின் இறுதிநாளான நேற்று செவ்வாய்கிழமை மாலை புனித தேர்ப்பவனி இடம்பெற்றது.
கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா நேற்று நிறைவடைந்தது.
மாலை இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து 5.00 மணியளவில் தேர்ப்பவனி இடம்பெற்றது.
தேர்ப்பவனி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி கடற்கரை வீதி, பழைய பூங்கா வீதி, ஈச்சமோட்டை வீதி வழியாகப் பயணித்த ஆலயத்தை வந்தடைந்தது. அதன் பின்னர் இடம்பெற்ற திருச்சொரூப ஆசிரை அடுத்து திருவிழா நிறைவுபெற்றது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்