ஞானசார தேரருக்கு பிடியாணை

பொது பல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இன முரண்பாடுகளை தோற்றுவிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவரை ஆஜராகுமாறு நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட அறிவித்தலை ஞானசாரர் தொடர்ந்தும் உதாசீனப்படுத்தி வந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இன ரீதியான முரண்பாடுகளை தோற்றுவிக்கும் செயற்பாடுகளை பொது பல சேனா முன்னெடுத்து வருவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில், அதன் பொதுச் செயலாளரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர்.

எனினும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், அதனால் மறைந்து வாழ்வதாகவும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்