லிபரல் ஜனநாயகக் கட்சி தலைவர் ராஜினாமா

பிரித்தானியாவில் கடந்த வாரம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் ஜனநாயகக் கட்சி தமது ஆதரவை நிரூபிப்பதற்கு தவறிய நிலையில் கட்சியின் தலைவர் டிம் ஃபரோன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) மேற்படி அறிவித்தலை வெளியிட்ட டிம் ஃபரோன், பொய்களை அடிப்படையாக கொண்ட பிரசாரத்தின் காரணமாக பொருளாதார அழிவை நோக்கி வழிநடத்தும் பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளை அனுமதிப்பதற்கு துணைநிற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஏமாற்றமளிக்கும் வகையில் தேர்தல் பிரசாரத்தை நடத்தியதாக அதிகளவில் விமர்சிக்கப்படும் டிம் ஃபரோன், லிபரல் ஜனநாயகக் கட்சியில் தலைமைப் பொறுப்பு ஏற்றதிலிருந்து அவரது கிறிஸ்தவ நம்பிக்கைகள் குறித்தும் அதிகளவில் கேள்விகள் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்