கல்கரியில் சடலமாக மீட்கப்பட்ட இரு ஈழத்தமிழர்களின் விவகாரம்: பொலிஸார் தீவிர விசாரணை

கல்கரியில் ஈழத்தமிழர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை பனோரமா ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து தந்தை மற்றும் மகன் ஆகிய இருவர்களின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். ஆனால் இவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்ற தகவலை பொலிஸார் தெரிவிக்கவில்லை.

சம்பவ தினத்தன்று வீட்டில் பலர் கூடியிருந்த வேளை பயங்கர விவாதம் நடைபெற்றதாகவும், விவாதம் கைகலப்பாக மாறவே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகவும், இதில் படுகாயமடைந்த இருவருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை வழக்கில் சந்தேகப்படும் குற்றவாளியாக கருதப்படும் நபர், அந்த குடும்பத்தை சார்ந்தவர் இல்லை என்ற போதிலும், குடும்ப உறுப்பினர்களுக்கு பரீட்சியமானவர் எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சம்பவத்தின் போது உடனிருந்த பெண் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்