பா.ஜ.கவுக்கு டிடிவி தினகரன் செக்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்தித்து புதிய நிபந்தனைகளை முன் வைத்துள்ளனர்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது, டிடிவி தினகரன் கட்சி பணியில் ஈடுபடுவதற்கு எந்தவித இடையூறும் வழங்கக்கூடாது என எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை, டிடிவி தினகரன் தலைமையில் நடத்தப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமியிடம் அவர்கள் வலியுறுத்தினர்.

டிடிவி தினகரனுக்கு முன்னுரிமை அளித்தால் மட்டுமே குடியரசு தலைவர் தேர்தலில் ஆதரவு அளிப்போம் என்றும் இந்த சந்திப்பில் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், இப்தார் நோன்பு நிகழ்ச்சி, டிடிவி தினகரன் தலைமையில்தான் நடக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய நிபந்தனைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்